சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வெடிப்பு – கார்கள் சேதம்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வெடிப்பு – கார்கள் சேதம்

சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க வைத்தனர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன.

மாலை 4:30 மணி அளவில் திடீரென்று பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் அருகில் இருந்தவர்கள்.

காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இந்த இடத்தை தற்போது சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

இந்த வெடிகுண்டை எறிந்து விட்டு சென்றவர்களைத் தேடி வருகிறார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

408 இந்து கோவில்கள் பொம்மை கடைகளாக, உணவகங்களாக பள்ளிக்கூடமாகவும் ஆக்கிரமிப்பு. மீண்டும் கோவிலாக புணரமைக்க முடிவு

408 இந்து கோவில்கள் பொம்மை கடைகளாக, உணவகங்களாக பள்ளிக்கூடமாகவும் ஆக்கிரமிப்பு. மீண்டும் கோவிலாக புணரமைக்க முடிவு

1990 ஆம் ஆண்டிற்க்குப் பிறகு பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள 428 இந்து கோவில்களில் 408 கோவில்களை ஆக்கிரமித்து, அவற்றைக் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் விற்கும் கடைகளாகவும், பள்ளிக்கூடங்களாகவும் மாற்றி விட்டனர். அவற்றை மீண்டும் கோவில்களாக மாற்றி இந்துக்களிடம் கொடுக்க பாக்கிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

பாக்கிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களின் வழிபாட்டு இருப்பிடமான கோவில்கள் மெதுவாக ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் அவை அனைத்தும் பொம்மைகள் விற்கும் கடைகளாகவும், உணவகங்களாகவும், பள்ளிக்கூடங்களாகவும் மாற்றப்பட்டு வருவதை கண்டு வருந்தி அரசிடம் தங்களின் கோவில்கள் மீண்டும் தங்களிடமே கொடுக்குமாறு நீண்ட காலமாக கேட்டு வந்தனர்.

சுதந்திரத்தின் போது, மக்களின் விருப்பங்களை மீறி, பாரத நாடு இரண்டாக பிளக்கப்பட்டது. அப்படி பிளக்கப்பட்ட பாக்கிஸ்தான் பகுதியில் நிறைய கோவில்கள் இருந்தன. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவை நோக்கி வந்து தஞ்சமடைந்தனர். ஆனால், சிலர் தங்கள் இருப்பிடங்களையும் கோவில்களையும் விட்டு வர இயலாமல், அங்கேயே தங்கினர். பின்னர் மெது மெதுவாக இந்த கோவில்கள் அங்கிருக்கும் முஸ்லிம் மக்களால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டு வந்தது. 428 கோவில்களில் இன்று 408 கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த இடம் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. சில இந்து கோவில்களை முஸ்லிம் மதராசாக்களாகவும் மாற்றினர்.

இந்நிலையில் தற்போது பாக்கிஸ்தான் அரசாங்கம் 400 இந்து கோவில்களைப் புணரமைத்து தங்களின் சிறுபான்மை மக்களான இந்துக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

முதலில் சியல்கோட் பகுதியில் புகழ் பெற்ற ஜெகன்நாதர் ஆலயமும், பெஷாவரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் தேஜா சிங்கும் முதலில் புணரமைக்கப் பட இருக்கிறது.

1992 ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் நடைபெற்ற வன்முறைகளுக்குப் பின்னர், மக்கள் இந்த சிவாலயத்திற்க்குச் செல்வதை நிறுத்தி விட்டார்கள்.

பெஷாவரில் உள்ள கோகர்நாத் சிவாலயத்தை மீண்டும் வழிபாட்டுக்குத் திறக்குமாறு பாக்கிஸ்தானில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கோவிலைப் பாரம்பரியச் சின்னமாக அறிவுக்கவும் உத்தவிட்டுள்ளது.

இப்போதிருந்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று இந்து கோவில்கள் புணரமைக்கப்படும். இதற்கு முன்னதாக, அனைத்து பாக்கிஸ்தான் இந்து உரிமைச் சங்கம் நடத்திய கணக்கெடுப்பில் 428 கோவில்களில் 408 ஆக்கிரமிக்கப்பட்டு விட்ட செய்தி அனைவரையும் அதிரச் செய்தது.

பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா பீடத்திற்க்கு பக்தர்கள் செல்லவும் ஏற்பாடுகள் செய்து வருகிறது.