திரௌபதி பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியீடு
சாதி காதலை மையமாக வைத்து பல தமிழ்ப்படங்களை சினிமாக் களம் கண்டது. அவையெல்லாம் சில உண்மைகளை மறைத்து ஒரு பக்கமாக எடுக்கப்பட்ட திரைப்படங்களாகும்.
இத்தகைய சூழ்நிலையில் சாதிக் காதலில் உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட இருக்கும் திரைப்படமாக வெளிவர இருப்பது திரௌபதி. இந்த படத்தின் ட்ரெய்லர் சனவரி மூன்றாம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த ட்ரெய்லர் வெளியிடப்பட்டது முதல் இதில் இடம்பெற்ற வசனங்கள் அனைத்தும் தீயாக பரப்பதாக சமுதாயத்தில் விவாதிக்கப்பட்டது. இதனால் இந்தப் படம் பெரும்பான்மையான மக்களிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், இதன் ட்ரெய்லர் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்து 5 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ் சமுதாயத்திற்கு எங்கள் #திரெளபதி குழுவினரின் புத்தாண்டு பரிசு.. மாற்றம் உண்டாகட்டும்.. ஈசனே துணை…
இதோ #Draupathi ட்ரெய்லர்https://t.co/iltgv0ibHM— Mohan G 🔥😎 (@mohandreamer) January 3, 2020
இதனிடையே இந்தப் படம் தற்போது பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியிப்படப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பது தெரிகிறது.