போர் தர்மமும் இந்தியாவில் நடந்த இரு வேறு உலகங்களின் போர்களும்

போர் தர்மமும் இந்தியாவில் நடந்த இரு வேறு உலகங்களின் போர்களும்

இங்கிலாந்து என்பது ஒரு சிறிய நாடு. அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் மிகப் பெரிய இந்திய துணைக்கண்டத்தை எப்படிப் பிடித்து ஆட்சி செய்தார்கள்? வெறும் சில ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் முப்பது கோடி கொண்ட இந்திய மக்களை ஆட்சி செய்தது எப்படி? இன்றைய தலைமுறையினரால் கேட்கப்படும் கேள்விகள் இவை. மிகவும் வியப்பாகவே இருக்கிறது. சில ஆயிரம் ஆங்கிலேயர்களால் முப்பது கோடி மக்களை போரில் வென்று ஆட்சி செய்தது எப்படி?

கேள்வி மிக நியாயமாகவும் எளிமையாகவும் இருந்தாலும், இதற்கு ஒரே வரியில் பதில் அளித்துவிட முடியாது. இந்தியா முழுவதும் ஒருமித்த நாடாக ஒரு அரசரின் கீழ் இல்லை என்பது பிரதான காரணமாக இருந்தாலும், பல்வேறு துணைக் காரணங்களும் உள்ளன. பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தனித்தனியே வாழ்ந்த இரு வேறு உலகங்கள் இங்கு விரைவான போக்குவரத்து வசதிகள் பெருகிய காரணங்களால் சந்திக்கின்றன. இரு வேறு பண்பாடுகளும் பழக்கங்களும் ஒழுக்க நடைமுறைகளும் கொண்டு நாடுகள் சந்திக்கும் போது எத்தனை குழப்பம் நிகழும் என்பதற்க்குச் சான்று தான் நம் நாட்டின் வரலாறு.

இதை முழுமையாக இங்கு ஆராய இயலாது என்ற காரணத்தினால் ஒரு சில முக்கிய பகுதிகளை மட்டும் இந்த பதிவில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். இதில் முக்கியமான ஒன்று தான், போர் தர்மம். அதாவது போர் நடக்கும் போது கடைப்பிடக்கப்பட வேண்டிய விதிகள். தர்மம் என்ற சொல் நம் பாரத நாட்டில் உருவானது. தர்மம் என்றால் என்ன என்று விளக்கவே தனி பதிவு எழுத வேண்டும். பெரும்பாலும் சரியானதைச் செய்வது என்ற பொருளில் வரும். யாருக்கும் ஒரு பக்கமாக ஆதரவாக இல்லாமல், நடுநிலையாக இருப்பது தர்மம். தர்மம் என்பது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளின் தொகுப்பாகும். அந்தக் காலத்தில் போர் செய்யும் போது கூட சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வகுத்துக் கொடுக்கப்பட்டது தான் போர் தர்மம். புராணங்களில் கூட இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் சில இங்கே.

சூரியன் உதித்த பின்னர் போர் ஆரம்பித்து, சூரியன் மறையும் போது போரை நிறுத்திவிட வேண்டும். இரவில் போர் புரியக் கூடாது.

பலர் சேர்ந்து ஒருவரைத் தாக்கக்கூடாது.

இரண்டு பேர் ஒரே மாதிரியான ஆயுதங்கள் வைத்திருந்தால் மட்டுமே நீண்ட நேரம் சண்டை செய்யலாம்.

ஒரு போர் வீரன் சரணடைந்து விட்டால், அந்த போர் வீரனை தாக்கவோ, காயப்படுத்தவோ, கொல்லவோ கூடவே கூடாது.

ஒருவர் சரணடைந்து விட்டால், அவர் போர்க்கைதியாக கருதப்படுகிறார். போர்க் கைதித்கான பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக நிற்கும் வீரர் ஒருவரை தாக்கவோ, காயப்படுத்தவோ, கொல்லவோ கூடாது. அவருடன் சண்டையிடக் கூடாது.

மயக்கம் அடைந்த நிலையில் ஓர் போர் வீரர் இருந்தால், அவரைத் தாக்கவோ, காயப்படுத்தவோ, கொல்லவோ கூடாது.

போரில் ஈடுபடாத பொதுமக்களையோ, விலங்குகளையோ ஒருவர் தாக்கக்வோ, கொல்லவோ கூடாது.

போர்க்களத்தில் புறமுதுகு காட்டிச் செல்லும் ஒரு வீரரைத் துரத்திச் சென்று தாக்கவோ கொல்லவோ கூடாது.

போரில் எந்த விலங்குகளையும், அதாவது எதிரி நாட்டு விலங்குகளாக இருந்தாலும் கூட, தனக்கு நேரடியாக ஆபத்து இல்லாத நேரத்தில் தாக்கவோ கொல்லவோ கூடாது.

ஒவ்வொரு ஆயுதத்தை பயன்படுத்துவதற்க்கும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதைக் கடைப்பிடிக்க வேண்டும். மீறக் கூடாது. உதாரணமாக, தண்டாயுதம் போன்ற கருவிகளைப் பயன்படுத்தும் போது எதிரியின் இடுப்புக்குக் கீழே தாக்கக்கூடாது.

அநியாயமான போரில் எவ்வகையிலும் எப்போதும் ஈடுபடக்கூடாது.

போர்க்கைதிகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் உயிர்கள் மிகவும் புனிதமாக கருதப்பட்டது. ஆகவே, இவர்களை எப்போது தாக்கவே கூடாது.

நில அபகரிப்பு செய்யக் கூடாது.

எத்தனையோ ஆயிரம் ஆண்டு காலமாக நாம் இந்த பாரதநாட்டில் இந்த போர் தர்மத்தைக் கடைப்பிடித்து வந்தோம். புராண காலத்திலும் இந்த தர்மம் கடைப்பிடிக்கப்பட்டிருப்பது புராண வரலாற்றிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. விதிகள் என்று இருந்தால், விதிமீறல் இருக்கத்தான் செய்யும். அது இயற்கை. சில விதமீறல்களை புறந்தள்ளிப் பார்த்தோமேயானால், இந்த போர் தர்மத்தைக் கடைப்பிடித்தே நம் நாட்டில் போர் நடைபெற்றிருக்கிறது. போரில் கூட தர்மத்தை மையமாக வைத்துப் போரிட்ட நமது நாடு தான் எத்தனை உயர்ந்தது ? நமது முன்னோர்கள் தான் எத்தனை உயர்ந்தவர்கள் ? பூமியின் வரலாற்றிலேயே இத்தனை உயர்ந்த கொள்கை எங்குமே கிடையாது.

இப்படி நாம் போர் தர்மத்தைக் கடைப்பிடித்து போர் செய்து வாழ்ந்த காலத்திலே தான், அரபு நாடுகளில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், இந்திய நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டு, அது உலகிலேயே செல்வம் கொழிக்கும் முதல் நாடாக இருப்பதைக் கேள்விப்பட்டும் இந்த நாட்டைக் கொள்ளையடிக்க போர் தொடுத்த வர ஆரம்பித்தனர். அவர்களுக்கு போர் தர்மம் என்று எதுவுமே கிடையாது. அவர்களுக்கு வெற்றி என்ற ஒன்று மட்டுமே உண்டு. அந்த வெற்றியை எப்படியாவது பறிக்கலாம் என்ற ஒரே விதி மட்டுமே. இதனால் தான், மிகுந்த மூர்க்கமான தாக்குதல்கள், இரவு நேரங்களில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது பூனை போல பதுங்கி படையெடுத்து முதுகில் குத்தித் தாக்குதல்கள், ஈவு இரக்கம் ஏதும் இல்லாமல் தாக்குதல், பெண்களைச் சூறையாடுதல், நிலங்களை அபகரித்தல், கொள்ளையடித்தல் என்று காட்டுமிராண்டித்தனமான ஓர் போர் முறையோடு அவர்கள் பாரத நாட்டை நோக்கி வந்து போரிட்டார்கள்.

இந்த இரண்டு வேறு உலகமும் 14 ஆம் நூற்றாண்டு முதல் 21 ஆண் நூற்றாண்டு வரை சந்தித்து இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எல்லாம் திரும்பி தங்கள் நாட்டுக்கே ஓடிவிட்ட போதிலும், அவர்கள் இங்கிருந்த நம் பெண்களோடு இணைந்தும், அவர்கள் கொள்கைகளையும், மதங்களைப் பரப்பி நம் மக்களில் சிலரை மாற்றியும் அவர்களின் விதைகளை விதைத்துச் சென்றுள்ளனர். அந்த விதைகள் தங்களின் அறியாமையால், இங்கு தொடர்ந்து அவர்களுக்காக அவர்களின் இனமாக, இங்கு போராடி வருகின்றன. இங்குள்ளவர்களை வெளிநாட்டில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது தெரிந்தும் தொடர்ந்து வாழ்ந்து வருவது உலகின் எட்டாவது அதிசயமாகும்.