சென்னையில் ஒரு கிரிவலம். வாருங்கள் நிறைமதி அன்று சென்னையில் கிரிவலம் செல்வோம்

சென்னையில் ஒரு கிரிவலம். வாருங்கள் நிறைமதி அன்று சென்னையில் கிரிவலம் செல்வோம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தமிழ் வழக்கு. ஆற்றல் உள்ள மலைகளை சிவமாகவே வணங்கி வலம் வருவதும் நம் மரபு. அவ்வாறாக இந்தியாவில் பல்வேறு மலைகளை சிவமாக வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான ஒரு மலை சென்னை மாநகரிலும் உள்ளது.

சென்னை மாநகரின் மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம், அரசன்கழனி, சித்தாலபாக்கம், நூக்கம்பாளையம் ஆகிய ஊர்களையும், போலினேனி ஹில்சைட் (Bollineni Hillside) போன்ற நவீன குடியமைப்பு நகரங்களின் நடுவில் அமைந்துள்ளது ஔடத சித்தர் மலை. இந்த மலையின் மீது பன்நெடுங்காலமாக சிவபெருமான் இலிங்க வடிவாய் எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார். நிறைய பக்தர்கள் இம்மலை மீது கூறை இல்லாமல் இருக்கும் சிவபெருமானைத் தரிசித்து அபிஷேக வழிபாடு செய்து வருகிறார்கள். இம்மலை மீது கார்த்திகை தீபத் திருநாள் அன்று, திருக்கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் நிறைமதி/பௌர்ணமி அன்று மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றளவு உள்ள இந்த மலையை ஒரு முறை வலம் செய்ய 1 மணி நேரம் 15 நிமிடங்களும் ஆகிறது. மலை மீது ஏற சுமார் 20-30 நிமிடமும், இறங்க சுமார் 15-20 நிமிடங்களும் ஆகிறது.

ஒவ்வொரு நிறைமதி நாளன்றும் மாலை 5 மணிக்கு அரசன்கழனி அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவிலில் இருந்து இந்த மலைவலம் துவங்குகிறது. சுமார் 3000 பேர் கலந்து கொள்ளும் இந்த கிரிவலத்தில் ஊர் மக்களும் சென்னையைச் சுற்றியுள்ள மக்களும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கிரிவலம் வருகின்றனர். கிரிவலம் வருவதற்க்கு முன்பு, பலர் தங்கள் இல்லங்களில் வாசலில் அழகிய கோலம் இடுகின்றனர். சிவ வாத்தியம் முன் செல்ல, தமிழர்களின் வேதமாம் பன்னிரு திருமுறை ஏந்தி பக்தர்கள் மலைவலம் வருகின்றனர்.

தை மாத நிறைமதி நன்னாளில் மலைவலத்தோடு மட்டும் அல்லாமல், கோவிலின் அருகில் இருந்த குளத்தில் தெப்பல் திருவிழா இந்த ஆண்டு முதன் முறையாக நடைபெற்றது. இதை பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தெப்பல் திருவிழாவைக் கண்டு களித்தனர்.

கோவிலை அடையும் வழி

மேடவாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. 51B பேரூந்து சைதாப்பேட்டை, மேடவாக்கத்திலிருந்து அரசன்கழனி நிறுத்தத்தில் நிற்கும். இறங்க வேண்டிய இடம் அரசன்கழனி பஸ்டாப். தாம்பரத்திலிருந்து 51K பேரூந்து இந்த நிறுத்தத்தில் நிற்கும்.

ஒவ்வொரு நிறைமதி தினம் அன்றும் வாருங்கள்.

அரசன்கழனி பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ள இடம் – இதை சுட்டவும்

மேலும் தகவல்களுக்கு: +91-8122299938, +91-9382664059 அழைக்கவும்.

கூகுள் வரை படத்தில் ஔடத சித்தர் மலை அமைவிடம்

கூகுள் வரை படத்தில் ஔடதசித்தர் மலை அமைவிடம்
கிரிவலப் பாதையில் கோலம்
அரசன்கழனி அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்
கிரிவலத்தின் போது..
கோவில் அருகே உள்ள அழகிய திருக்குளம்