தென்ஆப்பிரிக்கா பாக்கிஸ்தான் பயணத்தை ஒத்திவைத்தது.

தென்ஆப்பிரிக்கா பாக்கிஸ்தான் பயணத்தை ஒத்திவைத்தது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாக்கிஸ்தான் சுற்றுப்பயணத்தை தாமதித்துள்ளது. தன்னுடைய வீரர்களின் வேலைப் பளு அழுத்தத்தைக் குறைக்கவே இந்த தாமதம் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக மார்ச் 22 லிருந்து 29 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்த நிலையில், இது தாமதிக்கப்படுகிறது.

மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென்னாப்பிரிக்கா, மார்ச் 22 அன்று பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) முடிவடைந்ததும், மார்ச் 29 அன்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடங்குவதற்கு முன்பும் மூன்று டி 20 போட்டிகளுக்காக பாகிஸ்தானுக்கு வருகை தருவதாக திட்டமிட்டிருந்தது. ராவல்பிண்டியில் விளைடாடுவதாக இருந்தது. ஆனால், இந்த திட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் கிரிக்கெட் போர்டின் வாஷிம் கான் கூறும் போது, நாங்கள் தென் ஆப்பிரிக்க அணியோடு விளையாட மிகுந்த ஆர்வமாக இருந்தோம். ஆனால், தற்போது அவர்களின் வீரர்களின் பளுவைப் பொறுத்து ஒத்திவைக்கும் திட்டதை ஏற்றுக் கொள்கிறோம். விளையாட்டு வீரர்களின் வேலைப் பளு மிகவும் முக்கியமானது என்றும் அந்த வகையில் அவர்களின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் தெரிவித்தார். தற்போது இரு அணிகளும் அடுத்து விளையாடக் கூடிய தேதியை பேசி முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார்.